அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில் கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே