Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1429
அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற 
முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக் 
கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால் 
வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே
பாடல் எண் :2553
அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே  
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :2681
அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
படியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்
விடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே
கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே
பாடல் எண் :3323
அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே
பாடல் எண் :3616
அடியார் இதயாம் புயனே அபயம் 

அரசே அமுதே அபயம் அபயம் 
முடியா தினிநான் தரியேன் அபயம் 

முறையோ முறையோ முதல்வா அபயம் 
கடியேன் அலன்நான் அபயம் அபயம் 

கருணா கரனே அபயம் அபயம் 
தடியேல் அருள்வாய் அபயம் அபயம் 

தருணா தவனே அபயம் அபயம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.