அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பகே அசுரப் படைமுழுதும் தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே