அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ அருட்சிவ மதற்கெனப் பலகால் படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம் பார்த்தரு ளால்எழுந் தருளி மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய் வடிவிலாக் கருணை வாரியே மூன்று வயதினில் அருள்பெற்ற மணியே