அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும் அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே துடிவிளங்கக் கரத்தேத்தும் சோதிமலை மருந்தே சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப் போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன் பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே