அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில் கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே