அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன் றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன் கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன் கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன் நடுத்தய வறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே