அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத் தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச் சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக் கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக் கண்ணுத லானைஎம் கண்ணக லானை எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே