அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங் காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத் தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத் தன்னருளும் தன்பொருளும் தானே என்பால் கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும் குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே