அடுத்தார்க் கருளு மொற்றிநக ரைய ரிவர்தா மிகத்தாகங் கடுத்தா மென்றார் கடிதடநீர் கண்டீ ரையங் கொளுமென்றேன் கொடுத்தாய் கண்ட திலையையங் கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை யெடுத்தாற் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ