அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும் அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம் தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத் தரிசனம்செய் தேதுரத் தமிழ்ச்சொல் மாலை தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித் தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன் எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே