அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை பொங்கக்கோ ரணிகொண் டந்தோ பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்க ளேநீர் கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே என்னபயன் கண்டீர் சுட்டே எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய் எருவுக்கும் இயலா தன்றே