பாடல் எண் :72
அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே
பாடல் எண் :1119
அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண் ணீறே
பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
திணிகொள் சங்கர சிவசிவ என்று
சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.