பாடல் எண் :3662
அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே அவ்வுருவின் உருவத்திலே
அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியி஧ அவ்வொளியின் ஒளிதன்னிலே
பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே பக்கநடு அடிமுடியிலே
பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே பலித்தபர மானந்தமே
மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு வாழ்வே நிறைந்தமகிழ்வே
மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன் வரமே வயங்குபரமே
துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு துரியமே பெரியபொருளே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.