அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற் குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே
அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம் மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம் நேரிசை வெண்பா