அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் ஆனந்த போகமே அமுதே மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும்என் ஆருயிர்த் துணையே துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே தூயவே தாந்தத்தின் பயனே பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே