அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற தணியாக் கோலம் கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல் மணிசேர் கண்டன் என்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான் பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே