அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும் ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத் துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே