அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும் அளவாகி அளவாத அதீத மாகிப் பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம் பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும் பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும் பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம் கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக் கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும் அரும்பெருஞ் சித்தரே வாரீர் அற்புத ரேஇங்கு வாரீர் வாரீர்