அண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதிநின் றேத்தா மிண்டரைப் பின்றாவெளிற்றரைவலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக் குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே