அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள் ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக் கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம் ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்