அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றி யார்நீல கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் பண்டம் அறியேன் பலன்அறியேன் பரிவோ டணையப் பார்த்தறியேன் கொண்டன் மணக்குங் கோதாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே