அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில் பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம் கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர் வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே