அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும் கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும் காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும் பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும் உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும் உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே