அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர் ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால் புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப் புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப் பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும் படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய் இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே