அண்மை யாகும்சுந் தரர்க்கென்று கச்சூர் ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால் வாய்நி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர் தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ உண்மை யான்உமை அன்றிமற் றறியேன் ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே