அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய் ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள் நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள் நீலியோ தன்புடை ஆடும் தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள் தனித்தனி அவர்அவர் எடுத்தே கத்தவெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ