அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார் பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச் சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ