அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ அன்பிலே நிறைஅமு தென்கோ சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ மன்னும்என் வாழ்முதல் என்கோ இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி என்னைஆண் டருளிய நினையே