அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும் செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும் திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும் ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும் எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே