அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான் ஒதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன் இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன் எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே