அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம் அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன் உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும் எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே