அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின் உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம் மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே