அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம் சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே