அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த அய்யர் அமுதர்என் அன்பர் அழகர் நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள் இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா