அன்னப்பார்ப் பால்()அழ காம்நிலை யூடே அம்பலம் செய்துநின் றாடும் அழகர் துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும் சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா () அன்னைப்பார்ப்பால் - ஆ பா பதிப்பு