அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்தேன் அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள் துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள் நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார் நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே