அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன் உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும் ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம் இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின் இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர் கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே