அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக் கடையேன் படுந்துயரைக் கண்டு