அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன் என்னை இப்படி இடர்கொள விடுத்தால் என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன் பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப் போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனைஅ லால்எனை உடையவர் எவரே