அன்னைமது லாம்பந்தத் தழுங்கி நாளும் அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன் முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட் பரூஙதஇமணமே நறவேநற் புலவர் போற்றத் தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே