அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர் அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள் இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல் மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும் வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே