அன்ப தென்பதைக் கனவினும் காணேன் ஆடு கின்றனன் அன்பரைப் போல வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன் துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத் தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே