அன்பனே அப்பா அம்மையே அரசே அருட்பெருஞ் சோதியே அடியேன் துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே இன்பனே எல்லாம் வல்லசித் தாகி என்னுளே இலங்கிய பொருளே வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே