அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன் என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல் வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே