அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத் துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே
அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத் தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்