அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண் டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும் முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே