அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை அம்பலத் தேநடம் ஆடுகின் றானை வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை வானவர் கோனைஎம் வாழ்முத லானைத் துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச் சோதியைச் சோதியுள் சோதியை நாளும் என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே