அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத் துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர் துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம் இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே