அன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென் றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத் துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத் தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய் முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே